Sunday, 22 February 2015

திருஇடைச்சுரம் ( திருவடிசூலம்)

திருவடிசூலம்
சிவமயம்
பெயர்: திருவடிசூலம் ( திருஇடைச்சுரம்)
மூலவர்:ஞானபுரிஸ்வரர்
தாயார்:இமயமடக்கொடியம்மை
தல விருட்சம்:
தீர்த்தம்:
தேவியார் -
வரலாறு :

திருஞானசம்பந்தருக்கு களைப்பு திர ஈசன் தயிர் அளித்த ஸ்தலம்

கோவில் அமைப்பு:
இக்கோயிலில் தெற்கு நோக்கி உள்ள கோபுரம் இக்கோயிலின் பிரதான நுழைவாயிலகும். இக்கோயிலின் உள் செல்ல  நேரே விநாயகர் தெற்கு நோக்கி சன்னதி, இடப்பக்கம் 4  கால்மண்டபம்  வலப்பக்கம் பிராகாரத்தின் உள்ள நுழைவாயில் வாயிலில் உள்ள  செல்ல  உள் சன்னதியில் தாயார் தெற்கு நோக்கிய இமயமடக்கொடியம்மை தரிசித்து  உடன் கிழக்கு நோக்கி அமர்ந்த ஞானபுரிஸ்வர ஐயனை தரிசித்து,

உள் பிராகாரத்தின் வலம் வர சைவ குரவர் நால்வர், விநாயகர், வட கிழக்கு மூலையில்  தெற்கு நோக்கி உள்ள பைரவர் தரிசித்து.

கோவிலின் வெளி பிராகாரத்தின் வலம் வர ,கோவிலின் வடக்கே ஓர் அழகிய நந்தவனமும் ,மேற்கு நோக்கி அமைந்த சிவலிங்கத்தை தரிசித்து,
கோவிலின் வட கிழக்கு மூலையில் உள்ள நவக்கிரகத்தை வலம் வந்து . இக்கோவிலில் துவஸ்தம்பம் இல்லை. கோவில் நந்தீஸ்வரர் அருகே மேற்கு நோக்கி தாயாரை தரிசித்தென், தெற்கு நோக்கி  முருக பெருமான் சன்னதி










பாடல் வகை:
தேவாரம் (1.78 திரு இடைச்சுரம்)திருஞானசம்பந்தர்(பண் - குறிஞ்சி)


வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.


திருச்சிற்றம்பலம்

அமைவிடம்:
செங்கல்பட்டு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 7km வடகிழக்கே அமைந்துள்ளது..

வழி:
பயண அனுபவம் :
காலை 5.20  மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 6.00  பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை காலை 8.10 க்கு அடைந்தேன். செங்கல்பட்டு - திருபோரூர் சாலை வழியில் உள்ள திருவடிசூலம் அடைய , நடைபாதையாக செங்கல்பட்டு,வல்லம்,ஆலப்பாக்கம், குன்னவாக்கம், பொருத்தவாக்கம், புலிக்குடிவனம் வழியாக திருவடிசூலம் அடைந்தேன்.

திருச்சிற்றம்பலம்

Monday, 16 February 2015

திருக்கழுக்குன்றம்-II

திருக்கழுக்குன்றம்
சிவமயம்
பெயர்: திருக்கழுக்குன்றம் (அடிவாரக் கோயில்)
மூலவர்: பக்தவச்சலேஸ்வரர்
தாயார் :திரிபுரசுந்தரி அம்மன்
வரலாறு :

மாணிக்கவாசகர் குரு உபதேசம் பெற்ற ஸ்தலம்.

கோவில் அமைப்பு:
இக்கோயிலில் 4 கோபுரங்கள் உடையது.  கிழக்கு நோக்கி உள்ள கோபுரம் இக்கோயிலின் பிரதான நுழைவாயிலகும். இக்கோயிலின் உள் செல்ல இடப்பக்கம் 16 கால்மண்டபம்  வலப்பக்கம் சார்வர்தாய மண்டபம். பிராகாரத்தின் உள்ள நுழைவாயில் வாயிலில் உள்ள ஐயனை தரிசித்து, 

மேற்கு நோக்கி உள்ள சென்று கிழக்கு முகமாய் உள்ள பக்தவச்சலேஸ்வரர் சன்னதி தூங்கனை மண்டபம் உடையது, கஜபிரிஷ்ட கோபுரமுடையது தரிசித்து.  பக்தவச்சலேஸ்வரர் சன்னதியுள் வலம் வர, சூரியன் வாயில் அருகே மேற்கு நோக்கி உள்ளார். தொடர்ந்து வலம்வர விநாயகர்,63 நாயன்மார்கள் வடக்கு நோக்கி மூல மூர்த்தியாக சிவமுர்தங்கள் 63 உற்சவ மூர்த்திகள் நாயன்மார்கள் தொடர்ந்து  தெற்கு நோக்கி உள்ள பைரவர் தரிசித்து. 

பக்தவச்சலேஸ்வரர் சன்னதி தரிசித்து பின் கோயிலை வலம்வர  மாணிக்கவாசகர் சன்னதி மேற்கு உள்ளார். சன்னதியின் எதிரே ஆத்ம நாதர் (ஈசன்) குரு வடிவமாய்  கிழக்கு நோக்கி சன்னதி,
உடன் அருகே ஏகம்பரநாதர்  கிழக்கு நோக்கி  சன்னதி .  பூண்டுவன விநாயகர் கிழக்கு நோக்கி சன்னதி , ஆறுமுக பெருமான் உடன் வள்ளி தெய்வானை கிழக்கு நோக்கி சன்னதி,
தாயார் திரிபுர சுந்தரிஅம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, உடன் எதிரே பிரதட்ஷ வேதகிரீஸ்வரர் சன்னதி.உற்சவ முர்த்தியாய் நடராஜர்   தெற்கு நோக்கி உள்ளார்.




பாடல் வகை:
திருவாசகம் (30  திருக்கழுக்குன்றம்) (மாணிக்க வாசகர்) 

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே
சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும்
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

திருச்சிற்றம்பலம்


அமைவிடம்:
செங்கல்பட்டு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 14km தென்கிழக்கே அமைந்துள்ளது.
வழி:


பயண அனுபவம் :
காலை 5.00 மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 5.25 பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை காலை 7.10க்கு அடைந்தேன். நடைபாதையாக  செங்கல்பட்டு, வல்லம், ஆலப்பாக்கம், நென்மெலி,தண்டரை,புல்லெரி,கீரப்பாக்கம் வழியாக திருக்கழுக்குன்றம் அடைந்தேன். 
வழியில் குபேரேஸ்வரர் ,அன்னக்காவடி விநாயகர் ,அடிவாரக் கோயில் திருபக்தவச்சலேஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன்  சென்று தரிசனம் செய்தேன்.
பிறகு காலை 10.15 மணி அளவில் மலை கோவிலை அடைந்தேன்.
திருச்சிற்றம்பலம்

திருக்கழுக்குன்றம்-I

திருக்கழுக்குன்றம்
சிவமயம்
பெயர்: திருக்கழுக்குன்றம் (மலை கோயில்)
மூலவர்:வேதகிரீஸ்வரர்
தாயார்:சொக்க நாயகி யம்மை
தல விருட்சம்: வாழை மரம்
தீர்த்தம்: சங்கு தீர்த்தம்,பட்சி தீர்த்தம்
தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
வரலாறு :

பரத்வாஜ மகரிஷி 4 வேதங்கள் அறிய ஈசனை வேண்டிய தலம்.

கோவில் அமைப்பு:
வடக்கு நோக்கி அடிவாரத்தில் விநாயகர், தர்ம சாஸ்தா வை வணங்கி மலையின் மீது நடக்க  இரு பாதையாக பிரியும் வேளையில் வடக்கு நோக்கி நெத்தன படி மூலமாக அல்லது கிழக்கு நோக்கி உள்ள படி மூலமாக திருக்கோயிலை அடையாளம்.

தெற்கு நோக்கி உள்ள  நுழைவாயில் வழி நுழைந்து. உடன் இடம் திரும்பி  சன்னதியை அடைய வடக்கு நோக்கி உள்ள  நுழைவாயில் வழி செல்ல சன்னதியின் பின் பக்கம் வழி வலம் வர வேதகிரீஸ்வரர் அடையலம்,

வாயில் வடப்பக்கம் விநாயகர், இடப்பக்கம் வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் தரிசித்து.உள் செல்ல கிழக்கு நோக்கி உள்ள வேதகிரீஸ்வரர் காணலாம். இக்கோயில் நந்தியை காண முடியவில்லை உற்சவ மூர்த்தி நடராஜ பெருமனையும் தரிசித்து கோயிலை. வலம் வர தெற்கு நோக்கி நர்த்தண விநாயகர் சன்னதி ,உடன் அருகே தெற்கு நோக்கி சொக்க நாயகியம்மை சன்னதி தரிசித்து கோயிலின் இருந்து இறங்க ,சித்தர் குகை உள்ளது என்னும் அடையாள பலகை கண்டேன்,இருப்பினும் கிழக்கு பாதயாக கழுகு உண்ண வந்த இடத்தை தரிசித்து பல்லவர் குடைவரை கோயிலை கண்டு திருமலையிலிருந்து இறங்கினேன்.







பாடல் வகை:
தேவாரம் (1.103 திருக்கழுக்குன்றம்) (திருஞானசம்பந்தர்) (பண் - குறிஞ்சி )

தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

.* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

திருச்சிற்றம்பலம்



தேவாரம் திருநாவுக்கரசு சுவாமிகள் 6.92 திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர
ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின.     6.92.3-10

திருச்சிற்றம்பலம் 



தேவாரம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 7.81 திருக்கழுக்குன்றம் (பண் - நட்டபாடை)

கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.

இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே.

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே.

வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை
முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.

புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.

மடமு டைய அடியார் தம்மனத் தேஉற
விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன் றான்பயி லும்மிடங்
கடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே.

ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந்
தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே
கான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே.

அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே.

பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.

பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.

திருச்சிற்றம்பலம் 


அமைவிடம்:
செங்கல்பட்டு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 14km தென்கிழக்கே அமைந்துள்ளது..

வழி:



பயண அனுபவம் :
காலை 5.00 மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 5.25 பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை காலை 7.10க்கு அடைந்தேன். நடைபாதையாக  செங்கல்பட்டு, வல்லம், ஆலப்பாக்கம், நென்மெலி,தண்டரை,புல்லெரி,கீரப்பாக்கம் வழியாக திருக்கழுக்குன்றம் அடைந்தேன். 

வழியில் குபேரேஸ்வரர் ,அன்னக்காவடி விநாயகர் ,அடிவாரக் கோயில் திருபக்தவச்சலேஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன்  சென்று தரிசனம் செய்தேன்.

பிறகு காலை 10.15 மணி அளவில் மலை கோவிலை அடைந்தேன்.

திருச்சிற்றம்பலம்

Sunday, 8 February 2015

திருஅச்சிறுபாக்கம்

திருஅச்சிறுபாக்கம் 
சிவமயம்
பெயர்:திருஅச்சிறுபாக்கம்
மூலவர்:அட்சிசுவரர்
தாயார்:இலங்கிளி யம்மை
தல விருட்சம்: கொன்றை மரம்
தீர்த்தம்: சங்கு,சிம்ம தீர்த்தம்

வரலாறு :
சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்குக் கிளம்பிய போது தேர் அச்சு முறிந்தது விநாயகரிடம் ஆசி பெற்று போரில் வெற்றி பெற்ற தலமாக கருதபடுகிறது.

கோவில் அமைப்பு:

கிழக்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும்.
கிழக்கு கோபுரத்திற்கு முன் கோயில் குளம் உள்ளது.

அச்சிறுத்த விநாயகர் சன்னதி கோயிலின் எதிரே உள்ளது..

நுழைவாயில் நேரே அட்சிசுவரர் சன்னதி.வாயில் அருகே அனுமன்,
தொடர்ந்து வலம் வர விநாயகர்,சித்தி-புத்தி யுடன் மேற்கு நோக்கி உள்ளது.
63 -வர் சிலை வடிவமாய் சிலையின் மேல் அவர்தம் பெயரும்-மீனும் அதன் மேல் பெரிய புராண சருக்க பெயர்.அலமேலு மங்கை சன்னதி ,ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, உமையட்சிசுவரர் சன்னதி உள் சென்றால் திருமண கோலத்தில் ஈசன் அகத்தியருக்கு காட்சி தந்தாக கருதபாடுகிறது , தாயார் உமா பார்வதி சன்னத்தியின் உள் தெற்கு நோக்கி காட்சிதருகிறார். லக்ஷ்மி,சரஸ்வதி,துர்க்கை சன்னதி,ஆறுமுகபெருமான் உடன் வள்ளி-தெய்வானை சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது.

63-வர் உர்சவர்கள் ,நடராஜர், தெற்கு நோக்கி உள்ளது.கால பைரவர் வடகிழக்கில் மேற்கு நோக்கி உள்ளார். சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர்க்கு எதிரே அட்சிசுவரர் சன்னதி (வாயிலின் சற்று வலது புறம்தனியே அமைந்துள்ளது.)வாயில் அருகே விநாயகர் அவரின் மேல் வில் தங்கி 7-வரும் , லிங்கதின் மேல் பால் சுரக்கும் பசுவும் காணபடுகிறது.தரகன், வித்வான்மாலி ஆறுமுக பெருமான் உள்ளார்.அட்சிசுவரர் சன்னதியின்  சென்று சற்று உள் குனிந்து தரிசிக்கலாம்.கோவிலை வலம்வர சப்த கன்னி வடக்கு நோக்கி உள்ளார்கள்.தென்-மேற்கு மூலையில் ஓர் வசந்த் மண்டபமும் உள்ளது.
வடக்கில் கொன்றை மாரத்தடியில் கொன்றையடிசுவரர் கட்சி தருகிறார்.
நவக்கிரக சன்னதி உள்ளது,அதை தொடர்ந்து தாயார் இளங்கிளியம்மை தனி சன்னதி. சன்னதி அருகே தர்ம சாஸ்தா (ஐயப்பன்) உள்ளார் .

திருஅச்சிறுபாக்கம்  (பண் - குறிஞ்சி )

பொன்றிரண் டன்ன புரிசடை புரள 
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங் 
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை 
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

தேனினு மினியர் பாலன நீற்றர் 
தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார் 
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க 
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

காரிரு ளுருவ மால்வரை புரையக் 
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி 
நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியில் சேரார் 
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் 
மலைமக ளவளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் 
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத் 
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும் 
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும் 
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும் 
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க 
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய 
சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங் 
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடுமெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி 
இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங் 
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் 
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர் 
கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய 
பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய வரக்கன் 
பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.

நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும் 
நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும் 
எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய 
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள் 
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார் 
உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி 
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய 
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப் 
பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் 
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும் 
அன்புடை யடியவர் அருவினை யிலரே.


அமைவிடம்:

வழி:

செங்கல்பட்டு-விழுப்புரம் மார்க்கமாய் ஆச்சிரபாக்கம் ரயில் நிலைத்திலிருந்து சுமார் 900M தெற்கே அமைந்துள்ளது.
அல்லது மேல்மருவத்தூர் ரயில் நிலைத்திலிருந்து சுமார் 3.9KM  தெற்கே அமைந்துள்ளது.







திருச்சிற்றம்பலம்

Sunday, 1 February 2015

திருவலிதாயம் (பாடி)

திருவலிதாயம்
சிவமயம்
பெயர்: திருவலிதாயம்
மூலவர்:வல்லிசுவரர்
தாயார்:ஜெகதாம்பிகை
தல விருட்சம்: பாதிரி,கொன்றை மரம்
தீர்த்தம்:  பரத்வாஜ தீர்த்தம்

வரலாறு :

பரத்வாஜ மகரிஷி வல்லுறாக மாறி பூஜித்த  தலம் ஆதலால் வல்லிசுவரர்,
குரு பகவான் , அனுமன் இங்கு சிவனை பூஜித்த உள்ளனர்.

கிழக்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். உள்ளே திருவல்லிசுவரர் உடனுறை தாயார் ஜெகதாம்பிகை  சன்னதி ஒரே பிரகாரமாக அமைந்துள்ளது.
தாயாருக்கு நேரே தெற்கு நோக்கி ஒரு  நுழைவாயிலும்,
வலிதாய நாதர் நேரே கிழக்கு நோக்கி ஒரு  நுழைவாயிலும் அமைந்துள்ளது.
வலிதாய நாதர் சன்னதி தூங்கனை மண்டபமும்,கஜ பிரிஷ்ட கோபுரமும் கொண்டுள்ளது.

கிழக்கு நுழைவாயிலின் இடப்பக்கம் வலம்புரி விநாயகர் வலப்பக்கம் சூரியன்.
தொடர்ந்து வலம்வர சைவ குரவர் நால்வர் உடன் அருணகிரிநாதர் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.சோமஸ்கந்தர்,விநாயகர்,ஆறுமுக பெருமான் உடன் வள்ளி தெய்வானை, அனுமன் பூஜித்த சிவலிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரத்வஜா லிங்கம்.கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

சன்டிசர், ஏறிபத்தர், நமிநந்தி, திருநீலகண்டர், அரிவாட்டாயர், கோட்புலி, மங்கையர்கரசி, பெருமிழலை குறும்பர் தெற்கு நோக்கி அமைந்துள்ளது,
வலிதாய நாதர் சன்னதியுடன் அருகே விஷ்ணுதுர்கை வடக்கு நோக்கி அமைந்துள்ளது.பிரகாரத்தினுள் வடகிழக்கில் காலபைரவர் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

கோவிலின் தெற்கே ஓர் வசந்த மண்டபமும், கிழக்கே ஓர் பசுமடம் உள்ளது
வடகிழக்கு மூலையில் யாகசாலை, நவக்கிரக சன்னதி , குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.


திருவலிதாயம் (பண் - நட்டபாடை)

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.

படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்
கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.

ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.

ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்
புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே.

புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே.

ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்
கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே.

கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே.

கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே.

பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே.

ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.

வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்
கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே.


அமைவிடம்:

கொரட்டூர்   ரயில் நிலைத்திலிருந்து சுமார்  2.3Km  தெற்கே அமைந்துள்ளது.
வழி:




திருச்சிற்றம்பலம்