Showing posts with label திருவாசகம். Show all posts
Showing posts with label திருவாசகம். Show all posts

Monday, 16 February 2015

திருக்கழுக்குன்றம்-II

திருக்கழுக்குன்றம்
சிவமயம்
பெயர்: திருக்கழுக்குன்றம் (அடிவாரக் கோயில்)
மூலவர்: பக்தவச்சலேஸ்வரர்
தாயார் :திரிபுரசுந்தரி அம்மன்
வரலாறு :

மாணிக்கவாசகர் குரு உபதேசம் பெற்ற ஸ்தலம்.

கோவில் அமைப்பு:
இக்கோயிலில் 4 கோபுரங்கள் உடையது.  கிழக்கு நோக்கி உள்ள கோபுரம் இக்கோயிலின் பிரதான நுழைவாயிலகும். இக்கோயிலின் உள் செல்ல இடப்பக்கம் 16 கால்மண்டபம்  வலப்பக்கம் சார்வர்தாய மண்டபம். பிராகாரத்தின் உள்ள நுழைவாயில் வாயிலில் உள்ள ஐயனை தரிசித்து, 

மேற்கு நோக்கி உள்ள சென்று கிழக்கு முகமாய் உள்ள பக்தவச்சலேஸ்வரர் சன்னதி தூங்கனை மண்டபம் உடையது, கஜபிரிஷ்ட கோபுரமுடையது தரிசித்து.  பக்தவச்சலேஸ்வரர் சன்னதியுள் வலம் வர, சூரியன் வாயில் அருகே மேற்கு நோக்கி உள்ளார். தொடர்ந்து வலம்வர விநாயகர்,63 நாயன்மார்கள் வடக்கு நோக்கி மூல மூர்த்தியாக சிவமுர்தங்கள் 63 உற்சவ மூர்த்திகள் நாயன்மார்கள் தொடர்ந்து  தெற்கு நோக்கி உள்ள பைரவர் தரிசித்து. 

பக்தவச்சலேஸ்வரர் சன்னதி தரிசித்து பின் கோயிலை வலம்வர  மாணிக்கவாசகர் சன்னதி மேற்கு உள்ளார். சன்னதியின் எதிரே ஆத்ம நாதர் (ஈசன்) குரு வடிவமாய்  கிழக்கு நோக்கி சன்னதி,
உடன் அருகே ஏகம்பரநாதர்  கிழக்கு நோக்கி  சன்னதி .  பூண்டுவன விநாயகர் கிழக்கு நோக்கி சன்னதி , ஆறுமுக பெருமான் உடன் வள்ளி தெய்வானை கிழக்கு நோக்கி சன்னதி,
தாயார் திரிபுர சுந்தரிஅம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, உடன் எதிரே பிரதட்ஷ வேதகிரீஸ்வரர் சன்னதி.உற்சவ முர்த்தியாய் நடராஜர்   தெற்கு நோக்கி உள்ளார்.




பாடல் வகை:
திருவாசகம் (30  திருக்கழுக்குன்றம்) (மாணிக்க வாசகர்) 

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே
சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும்
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

திருச்சிற்றம்பலம்


அமைவிடம்:
செங்கல்பட்டு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 14km தென்கிழக்கே அமைந்துள்ளது.
வழி:


பயண அனுபவம் :
காலை 5.00 மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 5.25 பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை காலை 7.10க்கு அடைந்தேன். நடைபாதையாக  செங்கல்பட்டு, வல்லம், ஆலப்பாக்கம், நென்மெலி,தண்டரை,புல்லெரி,கீரப்பாக்கம் வழியாக திருக்கழுக்குன்றம் அடைந்தேன். 
வழியில் குபேரேஸ்வரர் ,அன்னக்காவடி விநாயகர் ,அடிவாரக் கோயில் திருபக்தவச்சலேஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன்  சென்று தரிசனம் செய்தேன்.
பிறகு காலை 10.15 மணி அளவில் மலை கோவிலை அடைந்தேன்.
திருச்சிற்றம்பலம்