Monday, 16 February 2015

திருக்கழுக்குன்றம்-II

திருக்கழுக்குன்றம்
சிவமயம்
பெயர்: திருக்கழுக்குன்றம் (அடிவாரக் கோயில்)
மூலவர்: பக்தவச்சலேஸ்வரர்
தாயார் :திரிபுரசுந்தரி அம்மன்
வரலாறு :

மாணிக்கவாசகர் குரு உபதேசம் பெற்ற ஸ்தலம்.

கோவில் அமைப்பு:
இக்கோயிலில் 4 கோபுரங்கள் உடையது.  கிழக்கு நோக்கி உள்ள கோபுரம் இக்கோயிலின் பிரதான நுழைவாயிலகும். இக்கோயிலின் உள் செல்ல இடப்பக்கம் 16 கால்மண்டபம்  வலப்பக்கம் சார்வர்தாய மண்டபம். பிராகாரத்தின் உள்ள நுழைவாயில் வாயிலில் உள்ள ஐயனை தரிசித்து, 

மேற்கு நோக்கி உள்ள சென்று கிழக்கு முகமாய் உள்ள பக்தவச்சலேஸ்வரர் சன்னதி தூங்கனை மண்டபம் உடையது, கஜபிரிஷ்ட கோபுரமுடையது தரிசித்து.  பக்தவச்சலேஸ்வரர் சன்னதியுள் வலம் வர, சூரியன் வாயில் அருகே மேற்கு நோக்கி உள்ளார். தொடர்ந்து வலம்வர விநாயகர்,63 நாயன்மார்கள் வடக்கு நோக்கி மூல மூர்த்தியாக சிவமுர்தங்கள் 63 உற்சவ மூர்த்திகள் நாயன்மார்கள் தொடர்ந்து  தெற்கு நோக்கி உள்ள பைரவர் தரிசித்து. 

பக்தவச்சலேஸ்வரர் சன்னதி தரிசித்து பின் கோயிலை வலம்வர  மாணிக்கவாசகர் சன்னதி மேற்கு உள்ளார். சன்னதியின் எதிரே ஆத்ம நாதர் (ஈசன்) குரு வடிவமாய்  கிழக்கு நோக்கி சன்னதி,
உடன் அருகே ஏகம்பரநாதர்  கிழக்கு நோக்கி  சன்னதி .  பூண்டுவன விநாயகர் கிழக்கு நோக்கி சன்னதி , ஆறுமுக பெருமான் உடன் வள்ளி தெய்வானை கிழக்கு நோக்கி சன்னதி,
தாயார் திரிபுர சுந்தரிஅம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, உடன் எதிரே பிரதட்ஷ வேதகிரீஸ்வரர் சன்னதி.உற்சவ முர்த்தியாய் நடராஜர்   தெற்கு நோக்கி உள்ளார்.




பாடல் வகை:
திருவாசகம் (30  திருக்கழுக்குன்றம்) (மாணிக்க வாசகர்) 

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே
சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும்
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

திருச்சிற்றம்பலம்


அமைவிடம்:
செங்கல்பட்டு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 14km தென்கிழக்கே அமைந்துள்ளது.
வழி:


பயண அனுபவம் :
காலை 5.00 மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 5.25 பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை காலை 7.10க்கு அடைந்தேன். நடைபாதையாக  செங்கல்பட்டு, வல்லம், ஆலப்பாக்கம், நென்மெலி,தண்டரை,புல்லெரி,கீரப்பாக்கம் வழியாக திருக்கழுக்குன்றம் அடைந்தேன். 
வழியில் குபேரேஸ்வரர் ,அன்னக்காவடி விநாயகர் ,அடிவாரக் கோயில் திருபக்தவச்சலேஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன்  சென்று தரிசனம் செய்தேன்.
பிறகு காலை 10.15 மணி அளவில் மலை கோவிலை அடைந்தேன்.
திருச்சிற்றம்பலம்

திருக்கழுக்குன்றம்-I

திருக்கழுக்குன்றம்
சிவமயம்
பெயர்: திருக்கழுக்குன்றம் (மலை கோயில்)
மூலவர்:வேதகிரீஸ்வரர்
தாயார்:சொக்க நாயகி யம்மை
தல விருட்சம்: வாழை மரம்
தீர்த்தம்: சங்கு தீர்த்தம்,பட்சி தீர்த்தம்
தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
வரலாறு :

பரத்வாஜ மகரிஷி 4 வேதங்கள் அறிய ஈசனை வேண்டிய தலம்.

கோவில் அமைப்பு:
வடக்கு நோக்கி அடிவாரத்தில் விநாயகர், தர்ம சாஸ்தா வை வணங்கி மலையின் மீது நடக்க  இரு பாதையாக பிரியும் வேளையில் வடக்கு நோக்கி நெத்தன படி மூலமாக அல்லது கிழக்கு நோக்கி உள்ள படி மூலமாக திருக்கோயிலை அடையாளம்.

தெற்கு நோக்கி உள்ள  நுழைவாயில் வழி நுழைந்து. உடன் இடம் திரும்பி  சன்னதியை அடைய வடக்கு நோக்கி உள்ள  நுழைவாயில் வழி செல்ல சன்னதியின் பின் பக்கம் வழி வலம் வர வேதகிரீஸ்வரர் அடையலம்,

வாயில் வடப்பக்கம் விநாயகர், இடப்பக்கம் வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் தரிசித்து.உள் செல்ல கிழக்கு நோக்கி உள்ள வேதகிரீஸ்வரர் காணலாம். இக்கோயில் நந்தியை காண முடியவில்லை உற்சவ மூர்த்தி நடராஜ பெருமனையும் தரிசித்து கோயிலை. வலம் வர தெற்கு நோக்கி நர்த்தண விநாயகர் சன்னதி ,உடன் அருகே தெற்கு நோக்கி சொக்க நாயகியம்மை சன்னதி தரிசித்து கோயிலின் இருந்து இறங்க ,சித்தர் குகை உள்ளது என்னும் அடையாள பலகை கண்டேன்,இருப்பினும் கிழக்கு பாதயாக கழுகு உண்ண வந்த இடத்தை தரிசித்து பல்லவர் குடைவரை கோயிலை கண்டு திருமலையிலிருந்து இறங்கினேன்.







பாடல் வகை:
தேவாரம் (1.103 திருக்கழுக்குன்றம்) (திருஞானசம்பந்தர்) (பண் - குறிஞ்சி )

தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

.* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

திருச்சிற்றம்பலம்



தேவாரம் திருநாவுக்கரசு சுவாமிகள் 6.92 திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர
ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின.     6.92.3-10

திருச்சிற்றம்பலம் 



தேவாரம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 7.81 திருக்கழுக்குன்றம் (பண் - நட்டபாடை)

கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.

இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே.

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே.

வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை
முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.

புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.

மடமு டைய அடியார் தம்மனத் தேஉற
விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன் றான்பயி லும்மிடங்
கடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே.

ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந்
தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே
கான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே.

அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே.

பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.

பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.

திருச்சிற்றம்பலம் 


அமைவிடம்:
செங்கல்பட்டு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 14km தென்கிழக்கே அமைந்துள்ளது..

வழி:



பயண அனுபவம் :
காலை 5.00 மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 5.25 பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை காலை 7.10க்கு அடைந்தேன். நடைபாதையாக  செங்கல்பட்டு, வல்லம், ஆலப்பாக்கம், நென்மெலி,தண்டரை,புல்லெரி,கீரப்பாக்கம் வழியாக திருக்கழுக்குன்றம் அடைந்தேன். 

வழியில் குபேரேஸ்வரர் ,அன்னக்காவடி விநாயகர் ,அடிவாரக் கோயில் திருபக்தவச்சலேஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன்  சென்று தரிசனம் செய்தேன்.

பிறகு காலை 10.15 மணி அளவில் மலை கோவிலை அடைந்தேன்.

திருச்சிற்றம்பலம்