திருமயிலை
சிவமயம்
பெயர்: திருமயிலை
மூலவர்:கபாலீசுவரர்
தாயார்:கற்பகவல்லியம்மை
தல விருட்சம்:புன்னைதாயார்:கற்பகவல்லியம்மை
தீர்த்தம்: கபாலீ(மணிகர்ணிக) தீர்த்தம்
வரலாறு :
இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
சம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் வரலாறு.
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான சம்பந்த நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.(மூலம் விக்கி)
திருமயிலை (பண் - சீகாமரம்)வரலாறு :

கோவில் அமைப்பு:
கிழக்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். மேற்கில் திசையில் ஒரு நுழைவாயில் உள்ளது.
கிழக்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது.
நுழைவாயில் நேரே நர்த்தன கணபதி கிழக்கு நோக்கி தனி சன்னதி.
வல பக்கம் அண்ணாமலையார் கிழக்கு நோக்கி தனி சன்னதி உடன்
உண்ணா முலையம்மை தெற்கு நோக்கி உள்ளது.
தொடர்ந்து வலம்வர கல்யாண மண்டபம் ,
இட பக்கம் அருகே பழனி ஆண்டவர் தனி சன்னதி வடக்கு நோக்கி உள்ளர்.வல பக்கம் வள்ளிதெய்வானையுடன் சிங்கார வேலர் மேற்கு நோக்கி தனி சன்னதி துவஸ்தம்பதுடன்.
தொடர்ந்து வலம்வர தாயார் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி தனி சன்னதி.
பிறகு கபாலீசுவரர் மேற்கு நோக்கி தனி சன்னதி ,சன்னதியின் உள் 63 உர்சவார் சிலை,துர்கை,லக்ஷ்மி,சரவஸ்தி மூவரும் கிழக்கு நோக்கி, வடகிழக்கு மூலையில் பைரவர் தெற்கு நோக்கி உள்ளர்.
63 சிலை வடிவமாய் ,மூலவர் பின்புறதில் விஷ்ணுவிர்க்கு பதிலாக லிகோத்பவார் உள்ளர்.தென்கிழக்கு மூலையில் சூரியன் மேற்கு நோக்கி உள்ளர்.
கபாலீசுவரர் சன்னதி எதிரே இட பக்கம் அருணகிரியார் தனி சன்னதி.
வல பக்கம் அங்கம்பூம்பாவை உடன் திருஞானசம்பந்தர் தனி சன்னதி.
தொடர்ந்து வலம்வர தல விருட்சம் புன்னை மரமும் உடன் புன்னை வனநாதர் தனி சன்னதி மேற்கு நோக்கி உள்ளர்.
கோவிலின் வடகிழக்கு மூலையில் சனீஸ்வரர் தனி சன்னதி மேற்கு நோக்கி உள்ளர்
இட பக்கம் சுந்தரேஸ்வர் கிழக்கு நோக்கி தனி சன்னதி,நவகிரக சன்னதி மற்றும் ஜகதீஸ்வரார் கிழக்கு நோக்கி தனி சன்னதி.

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.
மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.
தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.
நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.
உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.
கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.
அமைவிடம்:
திருமயிலை ரயில் நிலைத்திலிருந்து சுமார் 350M தென் கிழக்கே அமைந்துள்ளது.
திருச்சிற்றம்பலம்