Sunday, 8 March 2015

திருமாகறல் (மாகரல்)

திருமாகறல் (மாகரல்)
சிவமயம்
பெயர்: திருமாகறல்
மூலவர்:திருமாகறலீஸ்வரர்
தாயார்:திருபுவனநாயகி
தல விருட்சம்: எலுமிச்சை
தீர்த்தம்: அக்னி
வரலாறு :

கோவில் அமைப்பு:
இக்கோயிலில் கிழக்கு நோக்கி உள்ள கோபுரம் இக்கோயிலின் பிரதான நுழைவாயிலகும். இக்கோயிலின் உள் செல்ல  நேரே மேடையுடன் பிரகாரம்
பிரகாரத்தின்  வலப்பக்கம் விநாயகர் இடப்பக்கம் ,முருக பெருமான் சன்னதி வழிப்பட்டு  உள் செல்ல

இட பக்கம் ஆறுமுக பெருமான் சன்னதி வடக்கு நோக்கி சன்னதி வணங்கி, உடன்
வலப்பக்கம். தாயார் சன்னதி திருபுவனாயகி தெற்கு நோக்கி சன்னதி.

கிழக்கு நோக்கி உள்ள திருமாகறலீஸ்வரர்  சன்னதி அடைந்து ஐயனை தரிசித்து. உடன் தொடர்ந்து  பிரகாரத்தை வலம் வர
சோமஸ்கந்தர் சன்னதி கிழக்கு நோக்கி ,
சைவ குரவர் நால்வர், அதிகாரநந்தி, 63 நாயன்மார்கள் வடக்கு நோக்கி,
பொய்யா விநாயகர் கிழக்கு நோக்கி , வள்ளி தெய்வானுடன் சுப்ரமணியர் கிழக்கு நோக்கி ,
கோவில் தல விருட்சம் எலுமிச்சை மற்றும் மாதுளம் மரம்  உடன் அருகே ஓர் கேணியும் உள்ளது.
பெருமான்  சன்னதி தூங்கனை மண்டபம். கஜபிரிஷ்டம் கோபுரம் உடையது.

தொடர்ந்து வலம் வர ஐராவதந்தின் மேல் முருக பெருமான்  கிழக்கு நோக்கி  காட்சி தருகிறார்.
தாயார் சன்னதி அருகே நவகிரக மடமும் ,பைரவர் வடகிழக்கில் தெற்கு நோக்கி உள்ளார்.

கோவிலின் தென்மேற்கே அக்னி தீர்த்த குளம் கோவிலின் உள் உள்ளது.

கோவிலின் மேற்கு பகுதியில் அழகிய நந்தவனம் உள்ளது. பலா,வில்வம்,தென்னை,மா, மரம் உள்ளது.

பாடல் வகை:
தேவாரம் (3.72 திருமாகறல் - திருவிராகம்) (திருஞானசம்பந்தர்) (பண் - சாதாரி )



விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.

துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.

வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.

தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.

தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.

காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.

கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர், தேவியார் - புவனநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
















அமைவிடம்:


வழி:
பயண அனுபவம் :
காலை 4.50   மணிக்கு பெரம்பூர் லோகோ ரயில் நிலைத்திலிருந்து புறப்பட்டு , 6.00  பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து. செங்கல்பட்டு-காஞ்சிபுரம் மார்கமாய் வாலாஜாபாத் ரயில் நிலையத்தை காலை 8.05 க்கு அடைந்தேன். மாகரல் அடைய  நடைபாதையாக  வாலாஜாபாத், அவளுர், தன்மனூர்,கம்மராஜபுரம்,இளையானார் வேலூர், காவாந் தண்டலம் வழியாக மாகரல் 11.00 மணியளவில் அடைந்தேன். கோவில் மாசி திருவிழாவையொட்டி உற்சவ சாந்தி நடைபெற்றது.  உச்சி கால பூஜை கண்டு வீடு திரும்பினேன்.  இக்கோவிலின் ஐயன் அபிஷேக நீர் மருந்தாக கருதப்படுகிறது எலும்பு ,நரம்பு சம்பந்தமான நோய்களை தீர்க்க வல்லது என அறியப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்