Showing posts with label அச்சரப்பாக்கம். Show all posts
Showing posts with label அச்சரப்பாக்கம். Show all posts

Sunday, 8 February 2015

திருஅச்சிறுபாக்கம்

திருஅச்சிறுபாக்கம் 
சிவமயம்
பெயர்:திருஅச்சிறுபாக்கம்
மூலவர்:அட்சிசுவரர்
தாயார்:இலங்கிளி யம்மை
தல விருட்சம்: கொன்றை மரம்
தீர்த்தம்: சங்கு,சிம்ம தீர்த்தம்

வரலாறு :
சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்குக் கிளம்பிய போது தேர் அச்சு முறிந்தது விநாயகரிடம் ஆசி பெற்று போரில் வெற்றி பெற்ற தலமாக கருதபடுகிறது.

கோவில் அமைப்பு:

கிழக்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும்.
கிழக்கு கோபுரத்திற்கு முன் கோயில் குளம் உள்ளது.

அச்சிறுத்த விநாயகர் சன்னதி கோயிலின் எதிரே உள்ளது..

நுழைவாயில் நேரே அட்சிசுவரர் சன்னதி.வாயில் அருகே அனுமன்,
தொடர்ந்து வலம் வர விநாயகர்,சித்தி-புத்தி யுடன் மேற்கு நோக்கி உள்ளது.
63 -வர் சிலை வடிவமாய் சிலையின் மேல் அவர்தம் பெயரும்-மீனும் அதன் மேல் பெரிய புராண சருக்க பெயர்.அலமேலு மங்கை சன்னதி ,ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, உமையட்சிசுவரர் சன்னதி உள் சென்றால் திருமண கோலத்தில் ஈசன் அகத்தியருக்கு காட்சி தந்தாக கருதபாடுகிறது , தாயார் உமா பார்வதி சன்னத்தியின் உள் தெற்கு நோக்கி காட்சிதருகிறார். லக்ஷ்மி,சரஸ்வதி,துர்க்கை சன்னதி,ஆறுமுகபெருமான் உடன் வள்ளி-தெய்வானை சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது.

63-வர் உர்சவர்கள் ,நடராஜர், தெற்கு நோக்கி உள்ளது.கால பைரவர் வடகிழக்கில் மேற்கு நோக்கி உள்ளார். சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர்க்கு எதிரே அட்சிசுவரர் சன்னதி (வாயிலின் சற்று வலது புறம்தனியே அமைந்துள்ளது.)வாயில் அருகே விநாயகர் அவரின் மேல் வில் தங்கி 7-வரும் , லிங்கதின் மேல் பால் சுரக்கும் பசுவும் காணபடுகிறது.தரகன், வித்வான்மாலி ஆறுமுக பெருமான் உள்ளார்.அட்சிசுவரர் சன்னதியின்  சென்று சற்று உள் குனிந்து தரிசிக்கலாம்.கோவிலை வலம்வர சப்த கன்னி வடக்கு நோக்கி உள்ளார்கள்.தென்-மேற்கு மூலையில் ஓர் வசந்த் மண்டபமும் உள்ளது.
வடக்கில் கொன்றை மாரத்தடியில் கொன்றையடிசுவரர் கட்சி தருகிறார்.
நவக்கிரக சன்னதி உள்ளது,அதை தொடர்ந்து தாயார் இளங்கிளியம்மை தனி சன்னதி. சன்னதி அருகே தர்ம சாஸ்தா (ஐயப்பன்) உள்ளார் .

திருஅச்சிறுபாக்கம்  (பண் - குறிஞ்சி )

பொன்றிரண் டன்ன புரிசடை புரள 
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங் 
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை 
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

தேனினு மினியர் பாலன நீற்றர் 
தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார் 
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க 
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

காரிரு ளுருவ மால்வரை புரையக் 
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி 
நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியில் சேரார் 
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் 
மலைமக ளவளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் 
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத் 
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும் 
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும் 
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும் 
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க 
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய 
சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங் 
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடுமெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி 
இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங் 
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் 
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர் 
கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய 
பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய வரக்கன் 
பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.

நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும் 
நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும் 
எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய 
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள் 
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார் 
உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி 
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள் 
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய 
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப் 
பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் 
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும் 
அன்புடை யடியவர் அருவினை யிலரே.


அமைவிடம்:

வழி:

செங்கல்பட்டு-விழுப்புரம் மார்க்கமாய் ஆச்சிரபாக்கம் ரயில் நிலைத்திலிருந்து சுமார் 900M தெற்கே அமைந்துள்ளது.
அல்லது மேல்மருவத்தூர் ரயில் நிலைத்திலிருந்து சுமார் 3.9KM  தெற்கே அமைந்துள்ளது.







திருச்சிற்றம்பலம்