திருஇலம்பையங்கோட்டூர்
பெயர்: திருஇலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் திருக்கோயில்
மூலவர்: தெய்வநாயகேஸ்வரர் (சுயம்பு)
தாயார்: கனக குசாலம்பிகை,
தாயார்: கனக குசாலம்பிகை,
பிற பெயர்கள்(மூலவர்): அரம்பேஸ்வரர்,சந்திரசேகரர்,திண்டாத்திருமேனி, யோக தக்ஷிண மூர்த்தி
பிற பெயர்கள்(தாயார்):
தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மை,கதிர் முலையம்மை
தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மை,கதிர் முலையம்மை
புராண பெயர்கள்:அரம்பாபுரி,அரம்பையங்கோட்டூர்,இலம்பையங்கோட்டூர்
தல விருட்சம்: மரமல்லிகை
தீர்த்தம்: சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்


வரலாறு :
இலம்மையங்கோட்டூர்
அரம்பேஸ்வரர் கோயில் அல்லது எலுமியன் கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். இக் கோயில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
சம்பந்தரை இறைவன் சிறுபிள்ளை போலவும் பின்னர் முதியவர் போலவும் வழிமறித்த
பின்பும் அவர் உணராததால் வெள்ளைப் பசு வடிவங் கொண்டு கோயிலை நோக்கிச்
சென்று மறைந்தார் என்பது தொன்நம்பிக்கை. அரம்பர் முதலானோர் வழிபட்ட இடம்
எனப்படுகிறது. மகாபிரளய காலத்தில் உலகத்தைக் காப்பாற்ற சிவபெருமான் தங்க
அமைதியான இடம் என்று தேர்வு செய்த தலம் என்பதால் மன அமைதி தரும் தலமாக
வழிபடப்படுகிறது
இத்தலத்து இறைவனின் பெயர்க்காரணங்கள்:
தெய்வநாயகேஸ்வரர்
: சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்குக் கிளம்பிய போது தேர் சிறிது
சாய்ந்தது. அப்போது அவரது தலையிலிருந்த கொன்றை மலர் பூமியில் விழுந்து
சுயம்பு லிங்கமாயிற்று. அதுவே இத்தலம். தேவர்களால் வழிபடப்பட்டதால்
தெய்வநாயகேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
அரம்பேஸ்வரர்:
தேவலோகத்துப் பேரழகிகள் அரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் தங்கள் அழகையும்
பொலிவையும் இழந்து வருந்த,தேவகுரு நாட்டியக்கலைகளுக்கு அதிபதியான
ஸ்ரீதெய்வநாயகேஸ்வரரை 48 நாட்கள் வழிபட இழந்த பொலிவை மீண்டும் பெறலாம்
என்று கூற அவ்வாறே வழிபட்டு குறைகள் நீங்கப்பெற்றனர் தேவலோக அரம்பையர்.
ஆதலால் அரம்பேஸ்வரர் என்ற பெயரை இத்தலத்து இறைவன் பெற்றார்.
இத்தலத்திற்கும் அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர் என்றும் பெயர்
வந்தது.தொண்டை நாட்டில் கோட்டூர் என்று பல பகுதிகள் இருப்பதால்
வேறுபாட்டிற்காக இலம்பை என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. இலம்பை என்பதற்கு
நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை என்பது பொருள்.
சந்திரசேகரர்
: தட்சன் சாபத்திலிருந்து மீள சந்திரன் வழிபட்டு சிவபெருமான் சிரசில்
பிறையாகும் பேறு பெற்ற இடம் என்பதால் சந்திரசேகரர் என்றும் இங்குள்ள
சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.
பரிகாரத் தலம் (குரு)
மன
இறுக்கம் உள்ளோர் திங்களன்றும் வியாழனன்றும் தெய்வநாயகேஸ்வரரையும்
யோகதட்சிணாமூர்த்தியையும் 11 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட இழந்த
வலிமையைப் பெறுவர் என்பது தொன்நம்பிக்கை. சர்ம சம்பந்த நோய்களுக்கும்
பரிகார தலமாக உள்ளது

பாடல் வகை:
தேவாரம் (1.76 திரு இலம்பையங்கோட்டூர்) (திருஞானசம்பந்தர் )
தேவாரம் (1.76 திரு இலம்பையங்கோட்டூர்) (திருஞானசம்பந்தர் )
திருஇலம்பையங்கோட்டூர் ( பண் - குறிஞ்சி )
மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு
மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமல னெனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்
காலனாம் எனதுரை தனதுரை யாகக்
கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.
உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
விளம்புவா னெனதுரை தனதுரை யாக
வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமா மெனதுரை தனதுரை யாக
வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங்
கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற
வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
தனமிலா னெனதுரை தனதுரை யாகத்
தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக
ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல றாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆருலா மெனதுரை தனதுரை யாக
ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார
வாரண முழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக
வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர
மாசுண முழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்
பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்
களிமுக வண்டொடு தேனின முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
கந்தனை மலிகனை கடலொலி யோதங்
கானலங் கழிவளர் கழுமல மென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.
6.70 க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் (அப்பர்)
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்
கயிலாய நாதனையே காண லாமே.
ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்
கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்
கயிலாய நாதனையே காண லாமே.
இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக் களூர்
தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
கயிலாய நாதனையே காண லாமே.
எச்சில் இளமர் ஏம நல்லூர்
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.
கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே.
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்
கயிலாய நாதனையே காண லாமே.
வீழி மிழலைவெண் காடு வேங்கூர்
வேதி குடிவிசய மங்கை வியலூர்
ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை
ஆலங் காடும் அரைதைப் பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே.
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழுமதிகை வீரட் டானம்
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்
கயிலாய நாதனையே காண லாமே.
நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காண லாமே.
கடம்பத்தூர் ரயில் நிலைத்துலிருந்து சுமார் 15 KM தென்மேற்கே அமைந்துள்ளது.
வழி:
கடம்பத்தூர் ரயில் நிலைத்துலிருந்து பேரம்பாக்கம் பேருந்து நிலையம்,பேரம்பாக்கம் பேருந்து நிலைத்திலிருந்து ஆட்டோ மூலமாக அல்லது நடை பாதயாக பேரம்பாக்கம் ,களாம்பாக்கம் ,நரசிங்கபுரம் ,எலுமியன் கோட்டூர் பயண தூரம் 5 km.

கோவில் அமைப்பு:
மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார், தாயார் தென் திசை நோக்கி காட்சி தருகிறார். சூரியன்,சந்திரன் சைவ குரவர் நால்வர்.
விநாயகர்,முருக பெருமானுக்கு தனி சன்னதி.
பயண அனுபவம்:
ஒவ்வொரு சனி கிழமையும் சிவாலயம் நடைபாதயாக செல்வது எனது வழக்கம் , 27-12-2014 சனி கிழமை, திரு இலம்பையங்கோட்டூர் செல்லாம் என முடிவு செய்திருந்தேன்.விக்கி மற்றும் கூகிள் உதவியால் செல்லும் வழி தல வரலாறு முதலியவை திராட்டி நினைவில் வைத்து இருந்தேன்.கடம்பத்தூர் ரயில் நிலைத்துலிருந்து சுமார் 15 KM தெற்கே அமைந்துள்ளது ,என்பதனால் காலையே சென்று திரும்புவது என முடிவு செய்திருந்தேன்.27-12-2014 அன்று காலை 4.15 பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திலிருந்து திருத்தணி செல்லும் வண்டியில் ஏறி 5.20க்கு கடம்பத்துரை அடைந்தேன்.நடைபயணத்தை அங்கிருந்து தொடங்கி கடம்பத்தூர் , கசவநல்லதூர் ,புதுமாவிலங்கை, சத்தரை அடைந்து பேரம்பாக்கம் ,கொண்டாஞ்சேரி பிரியும் சாலையில்,

பேரம்பாக்கம் - திருவள்ளூர் சாலை வழியாக பேரம்பாக்கம் அடைந்து பின் களாம்பாக்கம் ,
அதை தொடர்ந்து குசஸ்தலை ஆறு (பாலம் இல்லை) கடந்து நரசிங்கபுரம்
நரசிங்கபுரத்தில் இருந்து திருஇலம்பையங்கோட்டூர்

திருஇலம்பையங்கோட்டூர் ஊர் எல்லையிருந்து.
வழியாக கோவிலை சென்றடைய காலை 7.58 ஆனது .

பேரம்பாக்கம் - திருவள்ளூர் சாலை வழியாக பேரம்பாக்கம் அடைந்து பின் களாம்பாக்கம் ,

அதை தொடர்ந்து குசஸ்தலை ஆறு (பாலம் இல்லை) கடந்து நரசிங்கபுரம்

நரசிங்கபுரத்தில் இருந்து திருஇலம்பையங்கோட்டூர்

திருஇலம்பையங்கோட்டூர் ஊர் எல்லையிருந்து.
வழியாக கோவிலை சென்றடைய காலை 7.58 ஆனது .
கோவில் நுழைவாயில்.
கோவில் பெரிதும் பரமரிப்பின்றி கோவில் உள்ளே பூட்ட பட்டிருந்தது .

இருப்பினும் உள் சென்று தரிசனம் செய்தேன்.
பிறகு பேரம்பாக்கம் திரும்பி
ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுறை திருசோளியிஸ்வரர் ஆலயம்
சென்று வீடு திரும்பினேன்.
No comments:
Post a Comment