திருக்கச்சிமேற்றளி
சிவமயம்
பெயர்: திருக்கச்சிமேற்றளி
மூலவர்:திருமேற்றளிசுவரர்
தாயார்:பாரசக்தி
தல விருட்சம்:
தீர்த்தம்:
வரலாறு :
கோவிலின் அமைப்பு:
கிழக்கில் உள்ள கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். உள் செல்ல தாயார் பாரசக்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
உடன் வலப்பக்கம் திருமேற்றளிசுவரர் சன்னதி மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
உடன் உள் செல்ல ஓத உருகீஸ்வரர் சன்னதி வழிபட்டு கோவிலை வலம் வர செல்வ விநாயகர் சன்னதி கிழக்கு நோக்கி,சுப்ரமணியர் சன்னதி கிழக்கு நோக்கி, பைரவர் சன்னதி வட கிழக்கு மூளையில் தெற்கு நோக்கி உள்ளார். சூரிய பகவான் சன்னதி எதிரே மேற்கு நோக்கி உள்ளார்
பாடல் வகை:
தேவாரம் 4.43 திருக்கச்சிமேற்றளி-திருநேரிசை (திருநாவுகரசர்) (பண் - கொல்லி)
மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாள்தன் னோடுங்
கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாடல் இலங்குமேற் றளிய னாரே.
மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை இலங்குமேற் றளிய னாரே.
விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்டார்
கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானார் இலங்குமேற் றளிய னாரே.
சோமனை அரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடும் எந்தை இலங்குமேற் றளிய னாரே.
ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித்
தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏனமக் கோடு பூண்டார் இலங்குமேற் றளிய னாரே.
மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாகர் இலங்குமேற் றளிய னாரே.
மண்ணினை யுண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினைப் பாடி யாடும் பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தார் இலங்குமேற் றளிய னாரே.
செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.
வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக்
கூறிய லாக வைத்தார் கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை இலங்குமேற் றளிய னாரே.
தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.
திருச்சிற்றம்பலம்
தேவாரம் 7.21 திருக்கச்சிமேற்றளி-திருநேரிசை (சுந்தரமூர்த்தி) (பண் - நட்டராகம்)
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும்
எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திருமேற் றளியுறையும்
மாட்டே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும்
வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திருமேற் றளியுறையும்
ஏறே உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந் திருமேற் றளியுறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே.
எம்மான் எம்மனையென் றவரிட் டிறந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த் தருள்செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா வீருரியாய் கனமேற் றளியுறையும்
பெம்மான் உன்னையல்லால் பெரிதேத்த மாட்டேனே.
நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்தாயென் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திருமேற் றளியுறையுங்
கோனே உன்னையல்லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே.
கையார் வெஞ்சிலைநா ணதன்மேற் சரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திருமேற் றளியுறையும்
ஐயா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
விரையார் கொன்றையினாய் விமலாஇனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உடலில்லுயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திருமேற் றளியுறையும்
அரையா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிருமேற் றளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் ஆரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
திருச்சிற்றம்பலம்
அமைவிடம்:
வழி:
திருச்சிற்றம்பலம்
கச்சி மேற்றளி

No comments:
Post a Comment